முதலமைச்சர் நாற்காலியில் விஜய்… பதவியேற்ற சில நிமிடங்களில் அதிரடி முடிவுகள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின் முக்கிய கோப்புகளில் கையெழுத்தை போட்டுள்ளார்.

குறிப்பாக, குடும்பங்களின் மின்சாரச் செலவை குறைக்கும் நோக்கில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனுடன் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த கோப்புகளிலும் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

Related Post

Latest News