பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை கைது செய்யும் போது போலீஸ்காரரின் கையை கடித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், ஆஷிக் என்ற இளைஞர் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கொல்லம் மாவட்ட பாரிப்பள்ளி போலீசார் உடனடியாக அங்கு சென்று, திரூர் போலீசாரின் உதவியுடன் அவரை சுற்றிவளைத்தனர். போலீசார் கைது செய்ய முயன்றபோது, அவர் போலீசாரை தாக்கியதுடன், கையை கடித்தும் தப்பிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், போலீசார் அவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கைது செய்தனர். பின்னர் அவர் திரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவத்தையடுத்து, போலீசாரை தாக்கி பணியில் இடையூறு செய்தது தொடர்பாகவும் ஆஷிக் மீது கூடுதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
