தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்டு(2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் தவெகவுக்கு 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
இதையடுத்து, தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தவெக அரசு அமைய 120 எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆதரவு கடிதத்தை வழங்கினார்.
இந்நிலையில். பல தடைகளுக்கு பிறகு, நாளை (மே 10) காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதனை அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
