மீண்டும் பட்டினப்பாக்கம் திரும்பிய விஜய் : விஜய்யை சந்திக்க மறுத்தாரா ஆளுநர்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த தவெக, பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சூழலில் காங்கிரஸ், CPI, CPIM, விசிக, IUML கட்சிகள் ஆதரவளித்ததால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க 120 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமைக் கோரி விஜய் பட்டினப்பாக்கத்தில் இருந்து ஆளுநர் மாளிகை புறப்பட்டார். அப்போது, விஜய்யை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை. என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கிண்டி நோக்கி புறப்பட்ட விஜய் மீண்டும் பட்டினப்பாக்கம் திரும்பினார்.

Related Post

Latest News