மெஜாரிட்டி கிடைத்தது., தமிழ்நாட்டின் முதலமைச்சராகிறார் விஜய்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த சூழலில் தவெக அரசுக்கு காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது. விடுதலை சிறுத்தை கட்சி தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் தவெக ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்துள்ளது. தற்போது ஆளுநரை சந்திக்க விஜய் சென்றுள்ளார். இதையடுத்து நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Post

Latest News