சாகும் வரை உண்ணாவிரதம் : விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தி த.வெ.க. நிர்வாகிகள் போராட்டம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், விஜய் நேற்று (07-05-2026) பதவியேற்பார் என்று தகவல்கள் பரவின.

118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் விஜய் முதல்-அமைச்சர் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் திண்டுக்கல் மாவட்டம், திருச்சி ரோடு கல்லறை மேடு அருகே தமிழக வெற்றிக்கழகம் செயற்குழு உறுப்பினர் சரண்யா மற்றும் வளர்மதி, அகஸ்தியா ஆகியோர் த.வெ.க. தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் கெடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க. நிர்வாகிகளை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

Related Post

Latest News