பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியாகி உள்ளது.
இதில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 98.24 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in இணையதளங்களில் சென்று பார்க்கலாம்.
‘வாட்ஸ்-அப்’ செயலி வாயிலாகவும் தேர்வு முடிவுகளை பார்க்க முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 7845252525 என்ற எண் ணுக்கு ‘Hi’ என பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர் மற்றும் தேர்வர்களின் வகுப்பை தேர்வு செய்தால் தேர்வெண், பிறந்த தேதி கேட்கும். அதனையும் உள்ளீடு செய்தால் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
