த.வெ.க தலைவர் விஜய், வி.சி.க மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவை கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆதரவு குறித்து முடிவு எடுக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் மே 8-ம் தேதி முக்கிய கூட்டங்களை நடத்துகின்றன.
தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பைச் சுற்றியுள்ள பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம், கூட்டணிக்கான ஆதரவை பெற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க : தள்ளிப்போகும் விஜய்யின் பதவியேற்பு விழா? : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
இந்நிலையில், ஆதரவு குறித்து இறுதி முடிவை எடுக்க இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மே 8-ம் தேதி மாநிலக் குழு கூட்டங்களை நடத்த உள்ளன. அதே நேரத்தில், மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்களுடனான ஆலோசனையும் நடைபெற்றுள்ளது.


