2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவு தருவதாக அறிவித்தது.
இதையடுத்து, தவெக தலைவர் விஜய், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த சூழலில் தற்போது வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெஜாரிட்டிக்கான முழு பட்டியலை கொடுக்கவில்லை என்பதால், ஆளுநர் அழைப்பு விடுப்பதை தாமதப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. பெரும்பான்மை உள்ள 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் தருமாறு விஜய்யிடம் ஆளுநர் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் ஆதரவு அளித்ததால், 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவே த.வெ.க.விற்கு உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 5 இடங்கள் தேவைப்படுகிறது. இதனால் விஜய் பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


