அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை : தவெக தரப்பில் விளக்கம்

தமிழகத்தின் 234 தொகுதிகளில், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. ஆனால், இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த சூழலில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதற்கு தவெக மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறுகையில், “ஆட்சி அமைப்பது தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்பட கட்சியின் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக வெளியான தகவல் தவறு” என கூறியுள்ளார்.

Latest News