எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் என்.ஆனந்த் : அடுத்து நடக்கப்போவது என்ன?

தமிழகத்தின் 234 தொகுதிகளில், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. ஆனால், இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இதையும் படிங்க : விஜய் குறித்து அன்றே கணித்தார் பிரசாந்த் கிஷோர் : வைரலாகும் பழைய வீடியோ

இந்த சூழலில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

அதிமுக-வின் ஆதரவைக் கோரி இந்தச் சந்திப்பு நடந்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இதுவரை வெளிப்படையாக ஆதரவு கோராத தவெக, தற்போது திரைக்குப் பின்னால் ஆதரவைத் திரட்டும் பணியில் இறங்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest News