10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி கைது

சென்னையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், காசிமேடு பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த பாம்பு தினேஷ் என்பவர் சிறுமியை மிரட்டித் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்தச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தினேஷ் மீது போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை நேற்றிரவு கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Latest News