செல்போன் மோகத்தை குறைக்க அதிரடி: மகளை கண்காணிக்க பவுன்சர்களை நியமித்த தந்தை!

குஜராத் மாநிலத்தில் தனது 16 வயது மகள் செல்போன் பயன்பாட்டிற்கு அடிமையாவதைத் தடுக்க, அவரது தந்தை எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மகளின் செல்போன் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அவரைக் கண்காணிக்கவும் மாதம் ரூ. 65,000 செலவில் பவுன்சர்களை தந்தை நியமித்துள்ளார்.

அந்த சிறுமி செல்போனை அதிகப்படியாகப் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும், ஆன்லைன் மூலம் அறிமுகமானவர்களை நேரில் சந்திப்பது மற்றும் புகைப்படங்களைப் பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே, தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த சிறுமி, வீட்டில் இருந்த தொலைக்காட்சி உள்ளிட்டப் பொருட்களை உடைத்துள்ளார்.

மகளின் இத்தகைய செயல்பாடுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, அவரை நல்வழிப்படுத்தவும், பாதுகாப்பு கருதியும் இந்த “பவுன்சர் கண்காணிப்பு” முறையைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related Post

Latest News