மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் சி.வி சண்முகம்

மயிலம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் இந்த முறை அதிக வாக்குப்பதிவால் கவனம் பெற்றது. மொத்தம் 2,09,016 வாக்காளர்களில் 1,87,360 பேர் நேரடியாகவும், 2,009 பேர் தபால் மூலம் வாக்களித்ததால், 89.64% என்ற உயர்ந்த வாக்குப்பதிவு பதிவானது.

இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகம் 82,353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் நிரஞ்சன் 52,312 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். தே.மு.தி.க. வேட்பாளர் வெங்கடேசன் 46,267 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் விஜய் விக்ரம் 4,386 வாக்குகளும் பெற்றனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளார்.

Related Post

Latest News