மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கிறது பாஜக

மேற்கு வங்காள தேர்தல் ஆரம்ப எண்ணிக்கையில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் எதிர்பாராத பின்னடைவை சந்தித்துள்ளது.

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் தபால் வாக்குகள் முதலில் கணக்கிடப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை ஆரம்பமானது. ஆரம்பத்திலிருந்தே பாஜக கூட்டணி பல தொகுதிகளில் முன்னிலைப் பிடித்தது.

இந்த தேர்தல் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி, பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதனால் மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக மக்களின் மனநிலை இருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

Latest News