தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியதும், முதற்கட்ட எண்ணிக்கைகளில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக தொகுதிகளில் முன்னிலை வகிப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் முக்கிய பங்கு வகித்த திமுக இந்த முறை ஆரம்ப கட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறாமல் இருப்பது கட்சியினருக்குள் கவலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக தலைமையகத்திற்கு வெளியே நடந்த மாற்றங்கள் அரசியல் சூழ்நிலையின் தீவிரத்தை காட்டுகின்றன.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் திமுகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்படத் தொடங்கியுள்ளன. கூடாரங்கள் நீக்கப்பட்ட வீடியோவை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது.


