சென்னையில் 16 தொகுதிகளும் தவெக முன்னிலை – முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இதில் யாரும் எதிர்பாராத விதமாக தவெக முன்னிலை வகித்து வருகிறது. சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.

சென்னையில் மொத்தமுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது. கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சைதாப்பேட்டையில் மா. சுப்பிரமணியன், துறைமுகத்தில் சேகர் பாபு உள்பட அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Latest News