ஜனநாயகன் லீக் விவகாரம் : கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “ஜனநாயகன்” திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இந்த சூழலில் முழு படமும் இணையத்தில் கசிந்தது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளது.

Latest News