தனுஷின் ‘கர’ திரைப்படம் : 2 நாட்களில் செய்துள்ள மொத்த வசூல்

தனுஷின் ‘கர’ படம் வெளியான இரண்டே நாட்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் வசூல் ரீதியாகவும் ஹிட் கொடுத்து வருகிறது.

‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 30ந் தேதி வெளியான படம் ‘கர’. இந்த திரைப்படம், 1990களில் ராமநாதபுரம் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டுள்ளது.

இப்படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம், வெறும் 2 நாட்களில் சுமார் 20 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

Latest News