நடிகர் அஜித்துக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் இன்று (மே 1, 2026) தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அஜித்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Latest News