விலைவாசி உயர்வின் நாயகன் மோடி – காங்கிரஸ் கடும் விமர்சனம்

சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ. 993 உயர்ந்து ரூ. 3,237 ஆகியுள்ளது. இந்நிலையில், விலைவாசி உயர்வின் நாயகன் மோடி என காங்கிரஸ் கட்சி பிரதமரை கடுமையாக விமர்சித்துள்ளது.

நாடு முழுவதும் எரிவாயு விலைகள் மீண்டும் உயர்ந்துள்ள நிலையில், அதன் தாக்கம் பொதுமக்கள் மற்றும் வணிகத் துறையில் தீவிரமாக உணரப்படுகிறது. குறிப்பாக சென்னையில், 19 கிலோ எடையுடைய வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ. 993 உயர்ந்து, ரூ. 3,237 என்ற அளவை எட்டியுள்ளது. இந்த திடீர் உயர்வு உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : OTP வழங்கினால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும் : புதிய நடைமுறை அமல்

இந்த சூழலில், அரசியல் விமர்சனங்களும் தீவிரமடைந்துள்ளன. காங்கிரஸ் கட்சி, இந்த விலை உயர்வை கடுமையாக எதிர்த்து, பிரதமர் நரேந்திர மோடியை “விலைவாசி உயர்வின் நாயகன்” என்று குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

விலை உயர்வின் நாயகன் மீண்டும் சாட்டையால் அடித்துள்ளார். இன்று வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலையை மேலும் ரூ. 993 உயர்த்தியுள்ளார்.

மோடி கடந்த 4 மாதங்களில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை உயர்த்தியதன் விவரம்:-

ஜனவரி 1 – ரூ. 111

பிப்ரவரி 1 – ரூ. 50

மார்ச் 1 – ரூ. 31

மார்ச் 7 – ரூ. 115

ஏப்ரல் 1 – ரூ. 218

மே 1 – ரூ. 993

மொத்தம் ரூ. 1 ஆயிரத்து 518 கடந்த 4 மாதங்களில் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 1 ஆயிரத்து 518 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இன்னும் 8 மாதங்கள் உள்ளன.

இவ்வாறு பதிவிட்டுள்ளது.

Latest News