நாட்டில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களின் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கள்ளச்சந்தை விற்பனையை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், மே 1ஆம் தேதி முதல் முக்கியமான ஒரு மாற்றம் அமலுக்கு வர உள்ளது. அதாவது, இனி, சிலிண்டர் டெலிவரி பெறுவதற்கு OTP (One-Time Password) முறையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். முன்பதிவு செய்யும் போது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு 4 இலக்க OTP அனுப்பப்படும். இந்த OTP-ஐ டெலிவரி செய்ய வரும் பணியாளரிடம் பகிர்ந்தால் மட்டுமே, சிலிண்டர் உங்களுக்கு வழங்கப்படும்.
OTP சரிபார்ப்பு முடிந்த பின்னரே, டெலிவரி செய்யப்பட்டதாக நிறுவனத்தின் கணினி அமைப்பில் பதிவு செய்யப்படும். இதனால், போலியான விநியோக பதிவுகள் உருவாகும் வாய்ப்பு குறையும்.


