சென்னையில் தக்காளி விலை அதிரடி உயர்வு : ஒரு கிலோ எவ்ளோ தெரியுமா?

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளி வரத்து குறைந்ததே இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மொத்த சந்தையில் ஏற்பட்ட இந்த தட்டுப்பாடு, சில்லறை சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மொத்த விலையில் கிலோக்கு ₹30 முதல் ₹40 வரை விற்கப்படும் தக்காளி, சில்லறை சந்தையில் ₹50 முதல் ₹60 வரை உயர்ந்துள்ளது.

சென்னைக்கு தக்காளி பெரும்பாலும் கிருஷ்ணகிரி மற்றும் கோலார் பகுதிகளில் இருந்து வரத்து ஆகிறது. ஆனால் அங்குள்ள கடும் வறட்சி மற்றும் கோடை வெப்பம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அறுவடை செய்யப்பட்ட தக்காளிகளும் அதிக வெப்பத்தால் விரைவில் கெடுவதால், விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இழப்புகள் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக சந்தைக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கையும் பாதியாகக் குறைந்துள்ளது.

மழை பெய்து விளைச்சல் சீராகும் வரை இந்த விலை உயர்வு தொடரக்கூடும் என்பதால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

Latest News