தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி செல்வராஜபுரம் பகுதியைச் சேர்ந்த உத்திரம் மகன் அருள்முத்து (22) என்பவர், நேற்று முன்தினம் அதிகளவில் மது அருந்திவிட்டு ஆறுமுகநேரி–காயல்பட்டணம் இடையிலான ரெயில்வே தண்டவாளத்தில் அவர் தூங்கியுள்ளார்.
அந்த நேரத்தில் சென்னையிலிருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


