தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆட்சிக்கு வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், விஜய் ரசிகர்கள் குறித்து ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், “மே 4 – விஜய் ரசிகர்களே… கவனம்!” என தொடங்கி, “மனம் உடைந்தாலும் அமைதியாக இருங்கள்; உங்கள் உயிர் முக்கியம்” என்ற செய்தி வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், “தற்கொலை என்பது எந்த நேரத்திலும் தீர்வாகாது” என்ற எச்சரிக்கையும் இடம்பெற்றுள்ளது.

மன அழுத்தத்தில் இருக்கும் நபர்கள் உதவி பெறுவதற்காக அவசர உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. அதில், அவசர உதவி எண் 112, மனநல உதவி எண் 1056 (24×7) மற்றும் Sneha Suicide Prevention Helpline (044-24640050) ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
“நீங்கள் தனியாக இல்லை… நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்ற நம்பிக்கையூட்டும் வாசகமும் இடம் பெற்றுள்ளது.


