வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூடு : உயிர் தப்பிய டிரம்ப், ஒருவர் கைது

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் மேடையில் இருந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை அதிகாரிகள் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றினர். இதையடுத்து அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

சம்பவத்திற்குப் பிறகு, ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தைச் சுற்றி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உயிருடன் பிடிபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபர் ஒரு “மனநோயாளி” என்றும், “மிகவும் கொடூரமானவர்” போலத் தோற்றமளித்தார் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

Latest News