மே 3 ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட் இன்று (ஏப்ரல் 26) வெளியிடப்படுகிறது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான நீட் (NEET) தேர்வு மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை, சுமார் 28 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத தயாராக உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (ஏப்ரல் 26) வெளியிடப்படுகிறது. மாணவர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


