சென்னையில் மேலும் 5 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்க அனுமதி

இந்திய ரயில்வே அறிமுகப்படுத்திய புதிய தலைமுறை ரயில்களில், அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெரம்பூரில் இயங்கும் ICF ஆலையில் மேலும் 5 புதிய அம்ரித் பாரத் ரயில்களை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்களின் வெற்றியைத் தொடர்ந்து, அம்ரித் பாரத் ரயில்கள் அதிக திறன், வேகம் மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இது மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதால் நீண்ட தூர பயணம் எளிதாக மாறியுள்ளது. ஒரு அம்ரித் பாரத் ரயில் சுமார் 1,800க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

இந்த 5 புதிய ரயில்கள் சேவையில் இணைந்தவுடன், சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து வசதிகள் மேலும் அதிகரிக்கும். இதனால், டிக்கெட் கிடைப்பதில் சிரமம் குறையும். மேலும் பயண நேரமும் குறையும்.

200 அம்ரித் பாரத் ரயில்களை தயாரிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை தொழிற்சாலை தேசிய அளவில் முக்கிய உற்பத்தி மையமாக உருவெடுத்து வருகிறது.

Latest News