74 ஆண்டு கால தமிழக தோ்தல் வரலாற்றில் புதிய சாதனை

நேற்று நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 84.51% வாக்குப்பதிவு நடைபெற்றது, இது வரலாற்றுச் சாதனையாகும்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணிக்குப் பிறகும் வரிசையில் இருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

மாவட்ட அளவில் பார்க்கும்போது, கரூர், தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் அதிகபட்ச வாக்குப்பதிவை பதிவு செய்துள்ளன. கரூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.66 சதவீதமும், தருமபுரியில் 90.14 சதவீதமும், ஈரோட்டில் 90.10 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இந்த தோ்தலில் மொத்தம் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 74 ஆண்டு கால தமிழக தோ்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு நடந்துள்ளது.

Latest News