வாக்களிப்பதை வீடியோ எடுத்த த.வெ.க.வை சேர்ந்த நபர் கைது

திருப்பத்தூரில் வாக்குச்சாவடிக்குள் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட த.வெ.க.வை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச் சாவடிக்குள் புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்தால், 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தேர்தல் ஆணையம் எச்சரித்தது.

இந்நிலையில், திருப்பத்தூர் தொகுதியில் சக்திவேல் என்பவர் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்ததை படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில், வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள், சம்பவத்தை உறுதி செய்தனர். அதன் பின்னர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

Latest News