மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் : முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி (இன்று) 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. வரும் 29-ந்தேதி மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

அம்மாநிலத்தில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே பலத்த போட்டி காணப்படுகிறது. இந்த சூழலில், இன்று மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Latest News