சுற்றுலாவிற்காக கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திற்கு வந்த அமெரிக்க பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் குட்டா கிராமத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். அந்த விடுதியில் பணியாற்றி வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஊழியர் வருஜேஷ் குமார், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட ஊழியரையும், சம்பவத்தை மறைக்க முயன்றதாக கூறப்படும் விடுதி உரிமையாளரையும் கைது செய்தனர்.
குடகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


