திமுக நிர்வாகியிடம் ரூ.2.44 கோடி பறிமுதல் : போலீசார் விசாரணை

பெரம்பலூர் செங்குணம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.44 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக நிர்வாகி மற்றும் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தொகை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விஜய் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது முறைகேடானது – நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், செங்குணம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.44 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தொகை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக நிர்வாகி ஜெயராமன் மற்றும் கார் ஓட்டுநர் ராஜேஷ் கண்ணன் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News