பெல்ஜியம் கார் பந்தயத்தில் அஜித் குமார் அணி 2 ஆவது இடம் பிடித்து இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி வெற்றிக் கோப்பையை வாங்கினார்.
திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், தனது மனதிற்கு நெருக்கமான கார் பந்தயத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் அஜித் குமார். இதற்காக அவர் ‘அஜித் குமார் ரேசிங்’ என்ற தனிப்பட்ட அணியை உருவாக்கி, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
நடிகர் அஜித்குமார் கடந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு முழுக்க முழுக்க கார் ரேஸில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார். உலகத்தின் பல நாடுகளுக்கு தனது ரேஸிங் டீமுடன் சென்று பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் வெல்கிறார்.
இந்நிலையில், பெல்ஜியத்தில் நடந்த ரேஸில் ஏகே அணி 2வது இடத்தை பிடித்தது. அந்தப் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.


