ஏ.சி., செல்போன், பிரிட்ஜ், டி.வி. விலை மீண்டும் உயருகிறது

மெமரி சிப் மற்றும் கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால், ஏ.சி., செல்போன், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி. போன்ற மின்சாதனங்களின் விலை கடந்த 4 மாதங்களில் ஏற்கனவே 3 முறை உயர்ந்துள்ளது. இம்மாத இறுதியில் மீண்டும் விலை உயர்வு அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பல நுகர்வோர் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு தேவை அதிகரித்தது. இதையடுத்து மூலப்பொருட்களின் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, மேலும் ஏ.சி. மின்சார சேமிப்பு விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக, ஏற்கனவே விலை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இம்மாத இறுதியில் மீண்டும் விலை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Latest News