தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல முடியாதபடி, இந்தி பேசும் வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை தடுத்து வைத்து இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சோதனை என்ற பெயரில் அரசியல் கடமைகளை செய்ய விடாமல், தன்னை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று ராகுல் காந்தி தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வர உள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குள் தன்னை முடக்கி வைக்க திட்டமிட்டு இந்த சோதனை நடைபெறுகிறது என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
ராகுல் காந்தி கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய வருவதால், தானும் கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டிருந்ததாக அவர் கூறினார். ஆனால் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் இருக்கும்படி தடுத்து வைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.


