சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது செல்போனில் சத்தமாக பேசுதல் அல்லது இயர்போன் இல்லாமல் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள் பார்க்குவது போன்ற செயல்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சமீப காலமாக, மெட்ரோ ரயிலில் பயணிகள் சிலர் உரத்த குரலில் செல்போனில் பேசுவது, இயர்போன் இல்லாமல் பாடல்கள் கேட்பது, ரீல்ஸ் பார்ப்பது போன்ற காரணங்களால் பிற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது என்ற புகார்கள் அதிகரித்தன. இதனைத் தொடர்ந்து, இப்படிப்பட்ட செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பராமரிப்பு சட்டத்தின் படி, மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்துவது விதிமுறைகள் மீறல் ஆகும். எனவே, ஸ்பீக்கர் மோடில் பேசுவது, இயர்போன் இல்லாமல் வீடியோ பார்ப்பது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறும் பயணிகளுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், தேவையானால் அவர்கள் மெட்ரோ வளாகத்திலிருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.


