கன்னியாகுமரியில் இயற்கை பொருட்களை பயன்படுத்தி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மகளிர் திட்டத்தின் சார்பில் வட்டார அளவில் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் நவதானியங்கள், பழவகைகள், காய்கறிகள் மற்றும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி, அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு பொருட்களை உருவாக்கினர்.

இந்நிகழ்வை, சுபஸ்ரீ நந்தா (கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொதுப் பார்வையாளர்) மற்றும் மனிஷா சென்டியா (கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பொதுப் பார்வையாளர்) ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர். அழகுமீனா பார்வையிட்டார்.

இந்த கண்காட்சி மூலம் பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

Latest News