ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘பல்ஸ்’ படத்தின் டீசர்

நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருந்த மகேந்திரனின் சர்வைவல் த்ரில்லர் திரைப்படம் ‘பல்ஸ்’. குளோபல் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அழகர்ராஜ் ஜெயபாலன் தயாரிப்பில், ‘எக்கோ’ திரைப்படத்தை இயக்கியிருந்த நவீன் கணேஷ் இதனை எழுதி இயக்கியுள்ளார்.

படத்தில் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக புதுமுக நடிகையான ரிஷிகா ராஜ்வீர் நடித்துள்ளார். மூத்த இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், லிவிங்ஸ்டன், கும்கி அஷ்வின், கூல் சுரேஷ், KPY சேது மற்றும் சரத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

RELATED NEWS

Latest News