தமிழகம் முழுவதும் 83 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 83 மாவட்ட அமர்வு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் இந்த மாற்றங்களை தலைமைப் பதிவாளர் எஸ். அல்லி அறிவித்துள்ளார்.

மதுரை, நாகப்பட்டினம், விருதுநகர், ராமநாதபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

  • என். லோகேஸ்வரன் – மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி → சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் (ஆய்வு)
  • கே. சுதா – (முன்பு) சென்னை → திருவள்ளூர் மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி ஆக மாற்றம்
  • ஏ. ஆனந்தகுமார் – நாகப்பட்டினம் மாவட்ட நீதிபதி → விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி ஆக மாற்றம்
  • எஸ். சிவகடாட்சம் – மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி → ராமநாதபுரம் எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆக மாற்றம்
  • எல்.எஸ். சத்தியமூர்த்தி – மயிலாடுதுறை மாவட்ட நீதிபதி → பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆக மாற்றம்
  • வி. பாண்டிராஜ் – சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற 6வது கூடுதல் நீதிபதி → காஞ்சிபுரம் மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி ஆக மாற்றம்
  • எம். எழிலரசி – செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி → விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆக மாற்றம்
  • இ. சசிகலா – செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி → செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆக மாற்றம்
  • டி. சுஜாதா – செங்கல்பட்டு வணிக வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி → செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஆக மாற்றம்
  • எம். சாய் சரவணன் – நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி → மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி ஆக மாற்றம்
  • என். வேங்கடவரதன் – சென்னை எம்.பி/எம்.எல்.ஏ வழக்குகள் சிறப்பு நீதிபதி → நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ஆக மாற்றம்
  • ஆர். சண்முக சுந்தரம் – சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி → சென்னை எம்.பி/எம்.எல்.ஏ வழக்குகள் சிறப்பு நீதிபதி ஆக மாற்றம்
  • எஸ். சுபாதேவி – சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி → தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ஆக மாற்றம்
  • பி. மதிசூதனன் – திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி → சென்னை சிறுவழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி இ.சசிகலா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டி.சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News