குஜராத் மாநிலம், தஹோத் மாவட்டத்தில் நடந்த திருமண விருந்தில் சாப்பிட்ட பலருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுமார் 50–60 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 50 முதல் 60 பேர் வரை கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர். நிலைமை தீவிரமாக மாறக்கூடும் என கருதி, உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிகிச்சை பெற்று வரும் அனைவரும் உடல் நலத்துடன் உள்ளனர் என டாக்டர் கூறியுள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


