தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த 3 வெளிநாட்டினர் கைது..!

தமிழ்நாட்டில் கடந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல விமான நிலையத்திற்கு வந்தபோது, கையில் மை இருந்ததை வைத்து அதிகாரிகள் குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, கனடா குடியுரிமை பெற்ற ஜீதேந்திரநாத், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சந்திரசேகர ரகுபதி, இலங்கையை சேர்ந்த ஒருவர் என மூவர் விமான நிலைய அதிகாரிகளால் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Post

Latest News