அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததுடன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து தவெக கட்சியில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலுமணி அணியை சேர்ந்த மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் திடீரென சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து அவர்கள் மூவரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள் தவெக கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திடீர் அரசியல் மாற்றம் அதிமுக வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், அடுத்த கட்டமாக மேலும் சில முக்கிய நிர்வாகிகள் கட்சி மாற வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
