தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு 2,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்

தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் நவீனப்படுத்தும் நோக்கில், அரசு போக்குவரத்து கழகத்திற்காக 2,000 புதிய ஏசி மின்சார பேருந்துகளை வாங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான டெண்டர் நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக அரசு பேருந்து சேவைகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதிய பேருந்துகள் அறிமுகம், பழைய வாகனங்களை மாற்றுதல் மற்றும் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தற்போது 2,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்

தற்போது, வெளியாகியுள்ள தகவலின் படி, அடுத்த மூன்று மாதங்களுக்குள் 2,000 புதிய ஏசி மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், அதன்பிறகு பேருந்துகள் வாங்கும் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த நகரங்களில் முதலில் இயக்கப்படலாம்?

புதிய மின்சார ஏசி பேருந்துகள் முதற்கட்டமாக பயணிகள் அதிகம் பயன்படுத்தும் நகரங்கள் மற்றும் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படலாம்.அதாவது, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி சேலம் ஆகிய நகரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நகரங்களுக்கு இடையேயான அதிக பயணிகள் பயன்பெறும் வழித்தடங்களிலும் இந்த பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

Related Post

Latest News