தமிழகத்தில் 15 முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்

தமிழக காவல் துறையில் 15 முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.

சென்னை நிர்வாகப் பிரிவின் காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த ஜி.வெங்கடராமன், சென்னை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அவினாஷ் குமார், ஏ.சரவண சுந்தர் மற்றும் ஜெ.மகேஷ் ஆகியோருக்குப் புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிகாரியின் பெயர் மற்றும் முந்தைய பதவிபுதிய பணியிடம்
ஜி.வெங்கடராமன், ஐ.பி.எஸ்
(காவல்துறை தலைமை இயக்குநர், நிர்வாகம், சென்னை)
காவல்துறை தலைமை இயக்குநர், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, சென்னை.
கே.பவானீஸ்வரி, ஐ.பி.எஸ்
(காவல்துறை தலைவர், தலைமையகம், சென்னை)
காவல்துறை தலைவர், சிங்கப்பெண் சிறப்புப் படை, சென்னை.
அவினாஷ் குமார், ஐ.பி.எஸ்
(காத்திருப்போர் பட்டியல்)
காவல்துறை தலைவர், பொதுப்பிரிவு, சென்னை.
பிரவீண் குமார் அபினபு, ஐ.பி.எஸ்
(காவல்துறை தலைவர், பொதுப்பிரிவு, சென்னை)
காவல்துறை தலைவர், வடக்கு மண்டலம், சென்னை.
ஏ.சரவண சுந்தர், ஐ.பி.எஸ்
(காத்திருப்போர் பட்டியல்)
காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு, சென்னை.
ஜெ.மகேஷ், ஐ.பி.எஸ்
(காத்திருப்போர் பட்டியல்)
காவல்துறை துணைத் தலைவர், வேலூர் மண்டலம்.
டாக்டர் பி.விஜயகுமார், ஐ.பி.எஸ்
(காவல்துறை துணைத் தலைவர் / இணை ஆணையர், போக்குவரத்து, தென் சென்னை)
காவல்துறை துணைத் தலைவர் / இணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, தென் சென்னை.
அபிஷேக் குப்தா, ஐ.பி.எஸ்
(காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மாவட்டம்)
காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாவட்டம்.
எஸ்.பிருந்தா, ஐ.பி.எஸ்
(காவல் கண்காணிப்பாளர் / படைத்தளபதி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஆவடி)
காவல் கண்காணிப்பாளர், நீலகிரி மாவட்டம்.
ஐ.ஷஹ்னாஸ், ஐ.பி.எஸ்
(காவல் கண்காணிப்பாளர், கணினி குற்றப்பிரிவு, சென்னை)
காவல் கண்காணிப்பாளர், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
எஸ்.அரவிந்த், ஐ.பி.எஸ்
(காவல் கண்காணிப்பாளர், கள்ளக்குறிச்சி மாவட்டம்)
காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் மாவட்டம்.
ALLATIPALLI PAVAN KUMAR REDDY, IPS
(காவல்துறை துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, தாம்பரம்)
காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்.
டாக்டர் கே.கார்த்திகேயன், ஐ.பி.எஸ்
(காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்)
காவல்துறை துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, தாம்பரம்.
வி.சதீஷ் குமார், ஐ.பி.எஸ்
(உதவி காவல் கண்காணிப்பாளர், திருவண்ணாமலை நகர உட்கோட்டம்)
காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
ரவீந்திர குமார் குப்தா, ஐ.பி.எஸ்
(உதவி காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் உட்கோட்டம்)
காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம்.

Related Post

Latest News