தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் 96.47% தேர்ச்சி விகிதத்துடன் மாணவிகள், மாணவர்களை விட அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த மார்ச் – 2025 பொதுத்தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,71,239. தேர்ச்சி பெற்றோர் 8,17,261. தேர்ச்சி சதவீதம் 93.80%. கடந்த ஆண்டு பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.51% சதவீதம் கூடுதலாக உள்ளது.
தேர்வெழுதிய மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை: 12,467.
மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 7,490
உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 4,977
100% தேர்ச்சி பெற்ற மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை – 5,171.
95% தேர்ச்சி பெற்ற மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை – 8,233.
100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை – 1,931.
95% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை – 3,463.
சிறப்பிடம் பெற்ற 5 மாவட்டங்கள் – அதிக தேர்ச்சி சதவீதம் (மொத்தப் பள்ளிகள்) :
| பாடம் | தேர்ச்சி சதவிகிதம் |
| தமிழ் | 98.43 % |
| ஆங்கிலம் | 99.44 % |
| கணிதம் | 97.36 % |
| அறிவியல் | 98.00 % |
| சமூக அறிவியல் | 97.93 % |
100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை:
| பாடம் | மாணவர்களின் எண்ணிக்கை |
| தமிழ் | 34 |
| ஆங்கிலம் | 92 |
| கணிதம் | 3,194 |
| அறிவியல் | 10,476 |
| சமூக அறிவியல் | 3,336 |
