10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவிகள் மீண்டும் சாதனை!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் 96.47% தேர்ச்சி விகிதத்துடன் மாணவிகள், மாணவர்களை விட அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த ஆண்டு தேர்வு எழுதிய சுமார் 9 லட்சம் மாணவர்களில், ஒட்டுமொத்தமாக 94.31 சதவீதத்தினர் (8,21,105 பேர்) தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர்கள் 92.15 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.47 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது?

இணையதளங்கள்

மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, மற்றும் results.digilocker.gov.in ஆகிய அரசு இணையதளங்களில் முடிவுகளைக் காணலாம்.

குறுஞ்செய்தி (SMS)

பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பதிவு செய்த கைபேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் விண்ணப்பத்தின் போது அளித்த கைபேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக நேரடியாக அனுப்பப்படும்.

பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவீதம் :

அரசுப் பள்ளிகள் – 91.86 %

அரசு உதவி பெறும் பள்ளிகள் – 94.34 %

தனியார் சுயநிதிப் பள்ளிகள் – 98.14 %

இருபாலர் பள்ளிகள் – 94.42 %

பெண்கள் பள்ளிகள் – 96.42 %

ஆண்கள் பள்ளிகள் – 88.50 %

Related Post

Latest News