BSNL நிறுவனத்தில் 100 பணியிடங்கள் : பட்டதாரி இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

மத்திய அரசின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நாடு முழுவதும் காலியாக உள்ள 100 இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. பொறியியல் அல்லது அறிவியல் துறையில் உயர்கல்வி முடித்த இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் 2026 ஜூலை 3 ஆம் தேதியின்படி 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதியாக பொறியியல் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வர்கள் இணையவழி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.16,400 முதல் ரூ.40,500 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் முழுமையாக இணையத்தின் மூலம் மட்டுமே ஏற்கப்படுகின்றன. பொதுப்பிரிவினருக்கு ரூ.2,000 கட்டணமும், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு ரூ.1,000 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 3.7.2026

கூடுதல் விவரங்களுக்கு : https://bsnlregistration.ibtexamination.com/AppO2BsNL_2026/

Related Post

Latest News