நாடு முழுவதும் கடந்த 3-ந்தேதி நடந்த ‘நீட்’ தேர்வின் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தேர்வு கட்டணத்தை மீண்டும் பெறுவதற்காக இதுவரை சுமார் 13 லட்சம் மாணவர்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வங்கி விவரங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
