விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினர் சி. விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர் நேற்று தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் விராலிமலை சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சி.விஜயபாஸ்கர் கடந்த 2001-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
ஏற்கனவே நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். தற்போது விஜயபாஸ்கரின் ராஜினாமாவும் ஏற்கப்பட்டுள்ளதால், காலியான சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 தொகுதிகள்
திருச்சி கிழக்கு
மதுராந்தகம்
பெருந்துறை
தாராபுரம்
அம்பாசமுத்திரம்
விராலிமலை
